நடிகர் விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம்

டிசம்பர் 31, 2018 445

சென்னை (31 டிச 2018): நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலும், நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பல காலமாக காதலித்து வருகிறார்கள். வரலட்சுமி போட்ட ட்வீட்டால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் பேச்சு கிளம்பியது.

இதையடுத்து, தற்போது நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. நடிகர் சங்கத்திற்கு, புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் கூறியிருந்தார். நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலுக்கு பெண்பார்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு, தற்போது மணமகளை தேர்வு செய்துள்ளனர்.

மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. விஷாலுக்கு மணமகள் முடிவானதையும் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடப்பதையும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...