விஷால் திருமண தகவலை அடுத்து வரலட்சுமி பரபரப்பு கருத்து !

டிசம்பர் 31, 2018 1243

சென்னை (31 டிச 2018): நடிகர் விஷாலுக்கு ஆந்திர பெண் அனீஷாவுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக வந்த தகவலை அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமார் பரபரப்பு ட்விட் பதிவு இட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கருத்தில், "நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை.

விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், வரலட்சுமிக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த வரலட்சுமி, எப்போதும் போல வருடத்தின் இறுதியில் வேலையில்லாத சிலர் எனக்கு திருமணம் என்ற வதந்தியை பரப்பி வருகிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் சினிமாவில் தான் கவனம் செலுத்தப் போகிறன். அடுத்த ஆண்டு பார்க்கலாம். வதந்தியை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும்." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...