சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நேர்ந்த சோகம்!

ஜனவரி 01, 2019 643

சென்னை (01 ஜன 2019): விஸ்வாசம் படத்தின் டிரைலர் ரஜினியின் பேட்ட டிரைலரைப் பின்னுக்குத் தள்ளி டிரண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.

ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் கடந்த 27 ஆம் தேதி ரிலிசானது. அதில் ரஜினி பேசும் பன்ச் டயலாக்குகள் மற்றும் ரஜினியின் இளமையான தோற்றம் ஆகியவற்றால் டிரைலர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. அதே சமயம் ரஜினி பேசிய சில வசனங்களை வைத்து அஜித்தைக் கலாய்க்க ஆரம்பித்தனர் ரஜினி ரசிகர்கள். டிரைலரும் யூட்யூபில் வைரலாகப் பரவியது. ரிலிசாகி 5 நாட்களில் 1 கோடியே 60 லட்சம் பேர் இதைப் பார்த்துள்ளனர்.

அதையடுத்து மூன்று நாட்கள் கழித்து 30 ஆம் தேதி அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் டிரைலர் ரிலிஸானது. ரிலிசான உடனே அதை வைரல் ஆக்கினர் அஜித் ரசிகர்கள். பேட்ட படத்தில் ரஜினி பேசிய சில வசனங்களுக்கு பதிலளிப்பது போல அஜித் சில வசனங்கள் பேசியது திட்டமிடப்பட்டதா அல்லது தற்செயலானதா எனத் தெரியவில்லை. ஆனால் டிரைலர் வைரல் ஆக அதுவே முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக டிரண்டிங்கில் இருந்த பேட்ட டிரைலர் தற்போது விஸ்வாசம் டிரைலரால் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டே நாட்களில் 1 கோடியே 50 லட்சம் பேர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் பேட்ட படத்தின் பார்வையாளர் எண்ணிக்கையை கட்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் 1 கோடியே 60 லட்சம் பேர் பார்த்த பேட்ட டிரைலர் 6 லட்சம் லைக்குகள் மட்ட்மே வாங்கியுள்ளது. ஆனால் விஸ்வாசம் டிரைலரோ 12 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.இதன் மூலம் அஜித் சமூக வலைதளங்களில் தான் தான் கிங் என்பதி மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...