பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு கொலை மிரட்டல்!

ஜனவரி 06, 2019 473

மும்பை (06 ஜன 2019): இந்தி பிக்பாஸ் 12 சீசன் டைட்டில் வின்னர் தீபிகாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

பாலிவுட்டில் சின்னத்திரை நாயகியாக வலம் வருபவர் தீபிகா காகர். இவர் இந்தி பிக்பாஸ் சீசன் 12 ல் பங்குபெற்ற தீபிகா, டைட்டிலை தட்டிச்சென்றார். இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தான் டைட்டிலை தட்டிச்செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி தீபிகாவிற்கு சாதகமாக நடந்துகொண்டது என ஸ்ரீசாந்தின் ரசிகர்கள் சொல்லி வந்தனர்.

ஆனால் ஆர்வக்கோளாறில் ஸ்ரீசாந்தின் ரசிகர் ஒருவர் உன் மூஞ்சில் ஆசிட் ஊத்துவேன் என டிவிட்டரில் தீபிகாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...