நடிகை சிம்ரன் மர்ம மரணம் - வாட்ஸ் அப் மெஸேஜை ஆய்வு செய்யும் போலீஸ்!

ஜனவரி 09, 2019 882

சம்பல்பூர் (09 ஜன 2019): பிரபல ஒடிசா நடிகை சிம்ரன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் அவரது கடைசி வாட்ஸ் அப் வாய்ஸ் மெஸேஜை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒடிஷா மாநிலத்தின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன் சிங் . செல்பி பிபோ , ரிக்‌ஷாவாலா,ரிம்ஜிம், தில் கா ராசா போன்ற ஆலபம் பாடல்களில் நடனம் ஆடி பிரபலமானார்.

இந்நிலையில் சாம்பல்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மஹாநதி ஆற்றின் கரையில் தலை, முகம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்களுடன் சிம்ரன் சிங்கின் உடலை போலீஸார் கண்டெடுத்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து இது கொலையா, தற்கொலையா என்ற ரீதியில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தன் கடைசி நேரத்தில், வாட்ஸ் அப்பில் இருந்து தன் தோழிக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் செய்துள்ளார். இதனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே சிம்ரன் சிங்கின் கணவருக்கு இந்த கொலையில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகித்துள்ள போலீசார் அவரது கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...