வெளியே சொல்லிடாதீங்க - பேட்ட குறித்து கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்!

ஜனவரி 11, 2019 505

சென்னை (11 ஜன 2019): பேட்ட படம் குறித்து ரசிகர்கள் ரகசியம் காக்க வேண்டும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முதல்முறையாக ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம், ‘பேட்ட’. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் எனப் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் வெளியான இந்தப் படத்தில், பாடல்கள் மற்றும் டிரெய்லர் போன்றவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப்பெற்றன.

இந்நிலையில் இந்த படம் நேற்று வெளியானது. இது தொடர்பாக கார்திக் சுப்புராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “ பேட்ட’ உங்களுடையது. படத்துக்காக நீங்கள் காட்டும் அன்புக்கு மிக்க நன்றிகள். தயவுசெய்து இந்தப் படத்தின் கதை மற்றும் சுவாரஸ்யங்களை வெளியில் சொல்லிவிட வேண்டாம். தியேட்டரில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பரப்பாதீர்கள். பைரசியை ஆதரிக்காதீர்கள். 'விஸ்வாசம்' படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...