யூ ட்யூபை மிரட்டும் சன் பிக்சர்ஸ் - மிரளாத புளூ சட்டை மாறன்!

ஜனவரி 15, 2019 700

சென்னை (15 ஜன 2019): பேட்ட படத்தின் மீது எதிர்மறை விமர்சனங்கள் உள்ள வீட்டியோக்களை நீக்குமாறு யுட்யூப்புக்கு நெருக்கடிக் கொடுத்து நீக்க வைத்துள்ளது சன்பிக்சர்ஸ்.

திரைப்பட விமர்சனங்களை யூ ட்யூபில் பதிவேற்றி விமர்சனங்களுக்காக மட்டுமில்லாமல் தனது ஸ்டைலுக்காகவே அதிகளவில் பாலோயர்களை வைத்திருப்பவர் ப்ளு சட்டை மாறன். ஆன்லைன் விமர்சகர்களில் பலர் பணம் வாங்கி விமர்சனம் செய்வதாக சொல்லப்பட்டாலும் இவர் அதில் விதி விலக்கு. ஏனென்றால் மிகப்பெரிய நடிகர்களான அஜித், விஜய், சிவகார்த்திக்கேயன் போன்றவர்களின் படங்கள் சிலவற்றை கூட இவர் கிழி கிழியென்று கிழித்திருக்கிறார். அதற்காக சம்மந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களிடமும் கெட்ட வார்த்தை அர்ச்சனைக்கும் ஆளாகியுள்ளார். பெரும்பாலும் இவரது விமர்சனங்களை படம் பார்த்தவர்கள் உண்மை என்று உணர்ந்திருக்கின்றனர். அதேவேளை லோ பட்ஜெட்டில் தயாராகும் நல்ல படங்களை பாராட்டியும் உள்ளார்.

இந்நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி வந்த பேட்ட படத்தை இவர் தனது வழக்கமானப் பாணியில் கிழித்திருந்தார். மன்னிக்கவும்.. விமர்சித்திருந்தார். இதனால் கடுப்பான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி யூட்யூப்பில் புகார் செய்து அந்த வீடியோவை நீக்க வைத்துள்ளது.

ஆனால் இதற்காகக் கவலைப்படாத மாறன் யுட்யூப்போடு போராடி மீண்டும் அந்த வீடியோவைக் கொண்டு வந்துள்ளார். சர்கார் பட ரிலிஸின் போது கூட விஜய்யை விமர்சித்திருந்த திராவிட இயக்கப் பேச்சாளர் வே மதிமாறனின் பேச்சுகளை நீக்க சன்பிக்சர்ஸ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. கருத்து சுதந்திரத்திற்கு எதிராக தனது அதிகாரப் பலததை தொடர்ந்து உப்யோகித்து வருவதாக சன்பிக்சர்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...