இந்தியன் 2 FIRST LOOK வெளியீடு!

ஜனவரி 15, 2019 564

சென்னை (15 ஜன 2019): கமல் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டு இருக்கிறார்.

கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்து 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய இத்திரைப்படம், மிகப்பெரும் வரவேற்பை பெற்றதுடன் வசூல் சாதனையும் புரிந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க இருக்கிறது என்றும் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் அண்மையில் செய்திகள் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ல 2.0 படம் பெரும் சாதனையை படைத்துள்ளதை அடுத்து, உலக நாயகனுடன் இந்தியன் 2-ல் களமிறங்கி பணிகளை தொடங்க இருக்கிறார் சங்கர்.

இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பின்றி ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் வகையில் படக்குழு இந்தியன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அத்தோடு படப்பிடிப்பு ஜனவரி 18 ஆம் தேதி தொடங்க உள்ளது என்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...