விரைவில் ஆரவுடன் திருமணமா? - நடிகை ஒவியா பதில்!

ஜனவரி 27, 2019 614

சென்னை (27 ஜன 2019): ஆரவுடன் காதல் திருமணமா? என்ற கேள்விக்கு நடிகை ஓவியா பதில் அளித்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் புகழ் பெற்றவர் ஆரவ் மற்றும் ஓவியா, இருவருக்கும் காதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஓவியா பேட்டி அளித்தார். அப்போது ஆரவ்வுடனான உறவு குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து பேசிய ஓவியா, எங்கள் இருவருக்கும் இடையே நல்ல தொடர்ப்பு இருக்கிறது. ஒருவொருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறோம். இப்போது எங்களுடயே ரிலேசன்ஷிப் பற்றி பேசுவது சரியல்ல. நாங்கள் இருவரும் பல விஷங்களை செய்து செய்கிறோம். ஆரவ் தன்னுடைய எதிர்காலம் குறித்து கவனத்தை செலுத்தி வருகிறார். நான் என்னுடைய படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். நாங்க இருவருமே ஒருவொருக்கு ஒருவர் அன்பு பாராட்டி வருகிறோம். இதனை நட்பு என்று சொல்ல வேண்டும். இது வேற மாதிரியான உறவு விரைவில் அறிவிப்போம் என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...