திரைப்படமாகிறது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்!

ஜனவரி 27, 2019 322

சென்னை (27 ஜன 2019): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தை, படமாக இயக்குவதாக இயக்குநர் சந்தோஷ் கோபால் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை போன்ற தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளை படமாக்கி வரும் இயக்குநர் சந்தோஷ் கோபால் இந்தப் படத்தையும் எடுக்க உள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி நான் இயக்கியுள்ள திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக இயக்குநர் சந்தோஷ் கோபால் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...