ஆபாச இணையதளங்களில் சின்மயி வீடியோ - குமுறும் சின்மயி!

ஜனவரி 29, 2019 860

சென்னை (29 ஜன 2019): ஆபாச இணையதளங்களில் பாடகி சின்மயியுடைய மார்ஃபிங் செய்யப் பட்ட வீடியோ, புகைப்படங்கள் வருவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அவேசமாக பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தது முதல் சின்மயி பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதில் குறிப்பாக வைரமுத்து ஆதரவாளர்கள் சின்மயியை கடுமையாக ஆபாச அர்ச்சனை செய்து வருகின்றனர்.

இவை அனைத்தையும் தைரியமாக சந்தித்து பதிலடி கொடுத்து வரும் சின்மயி மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளார். பொது இடங்களில் சேலை அணிந்து வாருங்கள் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள சின்மயி, "அப்படி நான் சேலை அணிந்து வந்தால் என் இடுப்பு மற்றும் மார்பு தெரியும்படி போட்டோ எடுத்து அதை வட்டமிட்டு ஆபாச இணையதளங்களில் போட்டுவிடுகின்றனர். அதன் பின் அதை பார்த்து சுயஇன்பம் காண்பதாக எனக்கே மெசேஜ் அனுப்புகின்றனர். சேலை அணிந்தாலும், ஜீன்ஸ் அணிந்தாலும் நான் இந்தியன் தான்" என சின்மயி கூறியுள்ளார்.

சின்மயியின் பதிவுகளுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...