தரக்குறைவாக படம் எடுத்தால் அப்படித்தான் விமர்சிப்பேன் - புளூ சட்டை மாறன் காட்டம்!

ஜனவரி 30, 2019 391

சென்னை (30 ஜன 2019): தரக்குறைவாக படம் எடுத்தால் அதனை திட்டித்தான் விமர்சிப்பேன் என்று பிரபல யூடூப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

யுடியூப் சேனலில் திரைப்பட விமர்சகராக அறியப்படும் புளூ சட்டை மாறன் என்பவர் சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தை நேர்மறையாக விமர்சனம் செய்ய தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக இயக்குநர் சக்தி சிதம்பரம் போலீஸில் புகார் தெரிவித்தார். மேலும் ஓவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் அப்படத்தை திட்டி விமர்சிப்பதை தன் வழக்கமாக கொண்டுள்ளதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பலர் கூறிவந்தனர்.

இந்நிலையில் பிரபல இணையதள பத்திரிக்கைக்கு இவ்விவகாரம் குறித்து பேசிய புளூ சட்டை மாறன், "இப்போது தரக்குறைவான படங்களையே எடுத்து வருகிறார்கள். அதனால் தான் தரக்குறைவாக விமர்சிக்கிறேன். அப்படி படம் எடுப்பவர்கள் யாரும் கலைசேவையாற்ற இங்கு வரவில்லை. நான் விமர்சனம் செய்ய எனக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. இதை யாரும் தடுக்க முடியாது. நான் தொடர்ந்து என் பணியைச் செய்வேன், எனக்கு எதிரான புகார்களை சட்ட ரதியாக எதிர்கொள்வேன் " என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...