இந்தியன் 2 வில் இசையமைக்காதது ஏன்? - ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!

ஜனவரி 31, 2019 538

சென்னை (31 ஜன 2019): ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் இசையமைக்காதது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்திய 2 படத்தின் படபிடிப்பு துவங்கியது. இந்திய 2 படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஷங்கர் படத்தில் ரஹ்மானுக்கு பதில் அனிருத் புக் ஆனது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரஹ்மான், "ஷங்கர் அந்நியன், நண்பன் படத்தில் கூட வேரு இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ளார். இது ஒரு சிறிய கேப்தான், நாங்கள் மீண்டும் இணைவோம். ஒரு சில காரணங்களால் இந்தியன் 2 வில் இசையமைக்க முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...