நடிகர் ஆர்யா - சாயிஷா திருமணம் குறித்து ஆர்யாவின் முன்னாள் காதலி கருத்து!

பிப்ரவரி 02, 2019 697

சென்னை (02 பிப் 2019): நடிகர் ஆர்யா - சாயிஷாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக பரவிய தகவலை அடுத்து எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்களில் ஒருவரான அபர்நதி கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் இருவீட்டார் சம்மதத்துடன் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து நடிகர் ஆர்யா, மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

சாயிஷா பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார் - சாயிரா பானு தம்பதியின் பேத்தி. வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

ஆர்யாவின் திருமணம் குறித்த தகவல் காட்டுத் தீ போல பரவி வரும் நிலையில், அவருடன் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்நதி இதுகுறித்து தனியார் இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், “ஆர்யா தனது படங்களுக்காக கடினமாக உழைத்து வருகிறார். ஆர்யா - சாயிஷா இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் யார் தேதி குறித்தது. இது உண்மையாக இருந்தால் அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பார்கள். இது வதந்தி என்று 99% நான் நம்புகிறேன். ஆர்யா சான்ஸே இல்ல. நான் கேட்டால் ஆர்யா என்னிடம் உண்மை சொல்லமாட்டார். ஆர்யா - சாயிஷா இருவரும் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை சமூகவலைதளங்களில் வெளியிட்டால் தான் நம்புவேன்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எப்படி இருந்தோமோ அப்படித் தான் இப்போதும் இருக்கிறோம். எங்களுக்குள் எந்தவித ஒளிவு மறைவும் கிடையாது” என்று கூறியுள்ளார்.

ஆர்யாவுடன் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட அபர்நதி, வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...