ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளையராஜாவின் பாட்டு!

பிப்ரவரி 05, 2019 687

சென்னை (05 பிப் 2019): ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளையராஜா பாடினார் என்ற தகவலை கேட்கும் போதே இனிமையாக உள்ளதா?.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நாளில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா 75 என்ற மலர் வெளியிடப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், இளையராஜாவின் ரசிகர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் ஹைலைட் இளையராஜா பாட, ரஹ்மான் இசைமைக்க ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்வை தந்தது.

இந்நிலையி இதுகுறித்து நடிகரும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால் இன்று, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது “ இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்வு இயக்குநர் பார்த்திபனால் சாத்தியமானது. இளையராஜா பாட, ரஹ்மான் இசைமைக்க இதுபோன்று வேறு எங்கும், ஏன் கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்தில் கூட நடக்காது. எவ்வளவு கோடி கொடுத்தாலும் இதைப்பார்க்க முடியாது.

பாராட்டு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தோம். எனினும் நடிகர், நடிகைகள் பலர் வரவில்லை.மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் சட்டவிரோதமான இணையதளங்களை முடக்க முடியும். தமிழக அரசு நினைத்தால் திருட்டு விசிடியை ஒழிக்கமுடியும்” என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...