ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள புகைப்படம் - விமர்சகர்களுக்கு அடுத்த பதிலடி!

பிப்ரவரி 09, 2019 752

சென்னை (09 பிப் 2019): இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகள்கள் மற்றும் மகனின் புகைப்படத்தை வெளியிட்டு அடுத்த அதிரடி காட்டியுள்ளார்.

சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் பத்தாவது ஆண்டு கொண்டாட்டத்தின் போது ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மகள் கதீஜாவும் நடத்திய உரையாடலும் அப்போது கதீஜா ஹிஜாப் அணிந்து வந்திருந்ததும் சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு படத்தை வெளியிட்டு ஃப்ரீடம் ஆஃப் சாய்ஸ் என்று ஹேஷ்டேக் செய்திருந்தார். கதீஜாவும் நான் தேர்ந்தெடுக்கும் உடை என் விருப்பம் என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் 'ஹலோ' இதழ் போட்டோ ஷுட்டிற்காக எடுக்கப் பட்ட மூன்று பேரும் இருக்கும் புகைப்படம் ஒன்றை மீண்டும் வெளியிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் விமர்சகர்களுக்கு அடுத்த பதிலடி கொடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...