வர்மா படத்திலிருந்து நீக்கப் பட்டேனா? - இயக்குநர் பாலா பதில்!

பிப்ரவரி 10, 2019 432

சென்னை (10 பிப் 2019): இயக்குநர் பாலா இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடிக்க வெளியாவிருந்த வர்மா பட வெளியீடு கைவிடப் பட்டுள்ள நிலையில் இயக்குநர் பாலா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்மா திரைப்படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தவறான விளக்கத்தை அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். வர்மா படத்திலிருந்து விலகியது தாம் எடுத்த முடிவு என்று சுட்டிக்காட்டியுள்ள பாலா, இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தயாரிப்பாளர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளியிட்டு இயக்குநர் பாலா விளக்கம் அளித்துள்ளார். மேலும் துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி இதுகுறித்து பேச விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...