ஆபாச படத்தில் ஓவியா - சர்ச்சையை கிளப்பியுள்ள ட்ரைலர்!

பிப்ரவரி 10, 2019 1302

சென்னை (10 பிப் 2019): சமீபத்தில் வெளியான ‘90 எம்.எல்’ (90 ML) திரைப்படத்தின் ட்ரெய்லர் பலத்த சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஏற்கனவே பல படங்களில் ஓவியா நடித்திருந்தாலும் பிக்பாஸ் அவருக்கு இன்னொரு அடையாளத்தை பெற்றுத் தந்தது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘90 எம்.எல்’ (90 ML) திரைப்படத்தின் ட்ரெய்லர் மிகவும் ஆபாசமாக உள்ளதாகவும், ஓவியா மீது இருந்த இமேஜ் கெட்டுவிட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் "பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள்" என ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘90 எம்.எல்’ படத்தை ).‘விசில்’ படத்தில் வரும் ‘அழகிய அசுரா’ பாடலைப் பாடியவர் அனிதா உதீப் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே 'குளிர் 100 டிகிரி' படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...