சவுந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் - குவியும் பகுத்தறிவாளர்களின் வாழ்த்துக்கள்!

பிப்ரவரி 11, 2019 620

சென்னை (11 பிப் 2019): நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் குறித்து பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் இன்று நடைபெறும் இந்த திருமணத்தை ஒட்டி ரஜினி தனக்கு நெருங்கியவர்களுக்கு ஒருபுறம் பத்திரிகை வைத்து கொண்டிருக்க, நேற்று முன்தினமே திருமணக் கொண்டாட்டம் தொடங்கி விட்டது.

திருமண நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நேற்று முன்தினம் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் விருந்து நடைபெற்றது. இதில், ரஜினியுடன் நட்புடன் இருக்கும் நல்லி குப்புசாமி, கண்ணதாசன் மகன் குடும்பம், ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள் என சினிமா சாராத நபர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது. பின்னர், எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

இதற்கிடையே பகுதி பிராமண சமுதாயத்தில் பிறந்த சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணம் பெற்றோர் அனுமதியுடன் நடைபெறுவது குறித்து பகுத்தறிவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...