அனுஷ்காவின் ரகசிய சிநேகிதன்!

பிப்ரவரி 13, 2019 902

சென்னை (13 பிப் 2019): உடல் எடை குறைந்த நடிகை அனுஷ்கா ஒரு ஆணுடன் தற்போது ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ரெண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அனுஷ்கா, தனது உயரம், எடை மற்றும் அழகால் பல ரசிகர்களை குவித்தார். அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் தான். தென் இந்திய நடிகைகளில் அதிகமான சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை இவர்.

தெலுங்கு திரையுலகில் எல்லாம், இவருக்கு கோடிகளில் தான் சம்பளம் என்று பலரும் பேசி வருவது வழக்கம். அவர் நடிப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 உலக அளவில் வசூலை அள்ளிக் குவித்தது. அந்த படத்தின் பிறகு வெளிநாடு முதல் இந்தியாவில் உள்ள அனைத்து பென்களும் அனுஷ்கா பாகுபலியில் அணிந்த ஆடை, நகைகள் என அனைத்தையும் வாங்கும் வேட்டையில் இறங்கினார்கள்.

இத்தகைய புகழுக்கு சொந்தக்காரியான அனுஷ்கா, 2015ம் ஆண்டில் வெளியான ‘இஞ்ஜி இடுப்பழகி’ படத்தில் உடல் எடை கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து பழைய ஒல்லி உடல் வாகிற்கு திரும்ப பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவை அனைத்துமே முழு பலன் அளிக்கவில்லை.

இவரின் உடல் எடை கூடுதல் ஊர் வாய்க்கு அசைப்போட்டது போல் ஆனது. படங்கள் வாய்ப்பளிக்க இயக்குநர்கள் சிலரும் யோசித்து வந்தனர். பொதுவாகவே ஒரு படம் வெற்றியடைந்து வசூலை அள்ளிக்குவித்தால் அந்த புகழை ஹீரோ ஏற்றுக்கொள்வதும், அதுவே அப்படம் தோல்வியடைந்தால், பழியை ஹீரோயின் சுமப்பதும் வாடிக்கையாடி விட்டது. குறிப்பாக ஒரு கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், உடல் எடைக்காக பலரின் விமர்சனங்களுக்கு ஆளான அனுஷ்கா, உடல் எடையை குறைத்த பிறகே திரும்புவேன் என்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். அவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு அருகில் ஒரு ஆணும் இருக்கிறார்.

விசாரித்ததில் அவர்தான் அனுஷ்காவின் உடல் எடை குறைய காரணமான பயிற்சியாளர் என தெரிய வந்துள்ளது. அவரே அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...