நடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்!

பிப்ரவரி 14, 2019 735

சென்னை (14 பிப் 2019): காதலன் கைவிட்டதால் மனம் உடைந்த துணை நடிகை யாஷிகா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவி சீரியல்களிலும் சில படங்களிலும் துணை நடிகையாக நடித்தவர் நடிகை யாஷிகா. இவருக்கும், சென்னை வடபழனியில் விடுதியில் வசித்து வந்தார். அப்போது செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்யும் பெரம்பூர் அரவிந்த் (22) பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன் ஜிகேஎம் காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன் இருவருக்கும் தகராறு என கூறப்படுகிறது.

இதையடுத்து அரவிந்த், யாஷிகாவை பிரிந்து பெரம்பூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த யாசிகா நேற்று முன் தினம் இரவு மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

யாஷிகா இறப்பதற்கு முன்னர் வாட்ஸ் ஆப் மூலம் தனது தாயாருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதில் நம்பி வந்த என்னை ஏமாற்றி, திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி கொடுமைப்படுத்திய காதலன் அரவிந்துக்கு, நான் இறந்த பிறகு தக்க தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...