என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார்!

பிப்ரவரி 19, 2019 493

சென்னை (19 பிப் 2019): நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பட்டதாரி என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள் அபி சரவணனும் அதிதி மேனனும். இருவரும் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் அதிதி மேனன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் தற்பொழுது வேறொரு தொடர்பில் இருப்பதாகவும் கூறி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அபி சரவணன் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையே இன்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது அதிதி புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அதிதி, அபி சரவணனுக்கும் தனக்கும் பட்டதாரி படம் மூலமே அறிமுகம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் இடையில் அபி சரவணன் தங்களது உறவை பயன்படுத்தி நன்கொடை என்ற பெயரில் பல விஷயங்களுக்கு பணம் பெற்று தனது சொந்த லாபத்திற்காக பயன்படுத்தியதை அறிந்து, அவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதன் முடிவில் இருவரும் பிரிய முடிவெடுத்து பிரிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் போலி திருமண சான்றிதழ் மூலம் தன்னை மிரட்டியதாகவும் அவர் வைத்திருப்பது போலி சான்றிதழ் என மதுரை நீதிமன்றம் மூலம் நிரூபித்த பின்னரே தான் அவர் மீது புகார் அளிக்க வந்துள்ளதாக தெரிவித்த அதிதி, தன்னை மிரட்டுவதோடு தனது வளர்ச்சியை தடுக்கவே அபி சரவணன் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...