தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர் தகவல்!

பிப்ரவரி 19, 2019 497

சென்னை (19 பிப் 2019): என்னோடு பணியாற்றியவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பாடகர் கார்த்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் இதுசம்மந்தமாக நீண்டப் பதிவினைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘சமீபகாலமாக ட்விட்டரில் என்னைப் பற்றி அநாமதேய புகார்கள் முன்வைக்கப்பட்டன. நான் எனது மனசாட்சிக்கு உண்மையாகவே இருக்கிறேன். எந்தவொரு நபரையும் அவரது எதிர்ப்பைக் கடந்து தொல்லை செய்தது இல்லை. கடந்த காலங்களில் எனது செய்கையால் யாராவது வருந்தியிருந்தால் தயை கூர்ந்து அவர்கள் என்னை நேரடியாக அணுகுமாறு வேண்டுகிறேன். எனது தவறுகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். மீ டூ இயக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனக்கு எதிரான புலம்பல்களின் பின்னணியில் உண்மை இருக்குமேயானாலும் நான் அதற்காக மன்னிப்பு கோரவும் தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன். யாருடைய வாழ்க்கையிலும் என்னால் கசப்புணர்வு இருக்கக் கூடாது.’ எனக் கூறியுள்ளார்.

மேலும் சமீபகாலமாக வெளி உலகில் அதிகமாக தலைகாட்டாமல் இருப்பது குறித்து பதிலளித்துள்ள அவர் ‘கடந்த சில மாதங்களாக எனது தந்தை மிகவும் மோசமான உடல் நிலையில் இருக்கிறார். அதனால் தான் நான் ஒத்துக்கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை. எனது தந்தையின் உடல்நலன் தேற எனது நண்பர்களும் நலன் விரும்பிகளும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து குறித்து மீ டு மூலம் பரபரப்பு புகார் கிளப்பியமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...