எங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது - நடிகை ஆலியா மானஸா!

பிப்ரவரி 22, 2019 497

சென்னை (22 பிப் 2019): எங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்று நடிகை ஆலியா மானஸாவும், நடிகர் சஞ்சீவும் தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவி சீரியல்களில் பிரபலமானவர்கள் நடிகர் சஞ்சீவும் நடிகர் ஆலியா மானஸவும். இவர்கள் நடிப்பில் ராஜா ராணி சீரியல் பிரபலம். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். இருவரும் அந்த காதலை வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சேனல் ஒன்றின் பேட்டியில் இவர்கள் திருமணம் குறித்து கேட்டதற்கு ஏற்கனவே சீரியல்களில் பலமுறை திருமணம் நடைபெற்று விட்டதாகவும் ஆனால் உண்மை திருமணம் இரண்டு வருடங்கள் கழித்து நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

ஆலியா மானஸா சஞ்சீவ் ஆகியோர் நடன ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமாகி பின்பு தற்போது சீரியல்களில் நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...