தீவிர சிகிச்சைப் பிரிவில் விஜய் பட நாயகி!

பிப்ரவரி 24, 2019 460

பெங்களூரு (24 பிப் 2019): விஜய் நடித்த ஃப்ரெண்ட்ஸ் படத்தில் நாயகியாக நடித்த நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 2001-ஆம் ஆண்டு வெளியானது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக விஜயலட்சுமி என்பவர் நடித்திருந்தார்.

இதனையடுத்து ‘ராமச்சந்திரா, மிலிட்டரி, எஸ் மேடம், சூரி, வாழ்த்துகள், பாஸ் என்கிற பாஸ்கரன், தில்லாலங்கடி’ போன்ற பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக வந்த தமிழ் படம் ‘மீசைய முறுக்கு’.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார். தற்போது, நடிகை விஜயலட்சுமி உயர் ரத்த அழுத்தம் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் தற்போது வறுமையில் வாடுவதாகவும் சினிமா துறையினர் அவருக்கு உதவ வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...