பள்ளி பருவத்தில் சக நண்பனின் வன்புணர்வு - சின்மயி வெளியிட்டுள்ள இன்னொரு ரகசியம்!

பிப்ரவரி 25, 2019 995

சென்னை (25 பிப் 2019): மிடூ புகழ் பாடகி சின்மயி ட்விட்டரில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை பகிர்ந்து வருபவர்.

சமீபத்தில் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் அவரது கணவரும் குடும்பமும் பக்க பலமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி பருவத்தில் தன்னுடன் படித்த நண்பன் ஒருவனால் சக ஆண் நண்பனுக்கு பாலியல் தொல்லை நடந்த விவரத்தை கூறி ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது என கூறியுள்ளார்.

ஒரு விசயம் அந்த நண்பனிடம் சிக்கிக் கொண்டதால் அதனை வைத்து மிரட்டியே சக நண்பனை வன்புணர்வு செய்தான் என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...