இயக்குநர் ஷங்கருடன் கூட்டணி - ஆவேசம் அடைந்த இளையராஜா!

மார்ச் 04, 2019 628

சென்னை (04 மார்ச் 2019): ஷங்கரும் இளையராஜாவும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நடிகை ரோகினி கோரிக்கை வைக்க இளையராஜா இதனால் ஆவேசம் அடைந்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இசைப்பணியை பாராட்டி ‘இளையராஜா 75’ விழா நடத்தப்பட்டது. சென்னை ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான நடிகர் நடிகைகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.

அந்த நிகழ்ச்சியில் நடிகை ரோகிணியிடம் இளையராஜா கடுமையாக நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சி பிரபல சன் தொலைக்காட்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை ரோகிணியிடம் இளையராஜா கடுமையாக நடந்துகொண்டது பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

அதாவது, நடிகை ரோஹிணி, இளையராஜா, இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோரை மேடையில் நிறுத்தி '' இயக்குனர் ஷங்கரிடம் நீங்களும், ராஜா சாரும் இந்த மேடையில் இருக்கீங்க. உங்க ரெண்டு பேரோட காம்பினேஷனையும் பார்க்கணும் அப்டிங்குறது நிறைய பேருக்கு நெடுநாள் ஆசை '' என்று சொல்லி முடிப்பதற்குள், குறுக்கிட்ட இளையராஜா “இப்படியெல்லாம் கேட்கக்கூடாதுமா... ஐ டோன்ட் லைக் திஸ் இப்படி கேட்கக்கூடாது. நீ சான்ஸ் கேட்குறியா எனக்கு?” என முகத்தில் அடித்தாற்போல் கேட்க, அந்த நொடியில் என்னசெய்வதென்று தெரியாத நடிகை ரோகினி “இல்ல... இல்ல... அப்படி இல்ல சார்...” என கூறி சமாளித்தார்.

ஆனாலும், விடாத இளையராஜா இப்ப ஏன் அந்த மேட்டர எடுக்குற நீ? அவருக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்குற ஆட்களை வச்சுக்கிட்டு அவரு வேலை பார்த்துக்கிட்டு இருக்காரு. அவரைப்போய் ஏன் டிஸ்டர்ப் பண்ற” என்று ஏ.ஆர் ரஹ்மானை மறைமுகமாக சாடினார் இளையராஜா.

பலபேர் முன்னிலையில் இளையராஜா இப்படி மோசமாக நடந்துகொண்டதால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...