முஸ்லிமாக மதம் மாறிய டி.ராஜேந்தர் மகனுக்கு விரைவில் திருமணம்!

மார்ச் 07, 2019 774

சென்னை (07 மார்ச் 2019): முஸிமாக மதம் மாறிய டி.ராஜேந்தர் மகன் டி.ஆர்.குறளரசனுக்கு விரைவில் திருமணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் முஸ்லிமாக மாறிய குறளரசன் முஸ்லிம் பெண்ணை காதலிப்பதாகவும் அதனால்தான் முஸ்லிமாக மதம் மாறினார் என்றும் பேசப் பட்டது. ஆனால் அதுகுறித்து டி.ஆர் தரப்பில் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி குறளரசனுக்கு திருமணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பெண் யார் என்பது குறித்து தகவல் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...