சீரழிவுப் பாதையில் தமிழ் சினிமா - அதிர வைக்கும் அமலாபால்!

மார்ச் 11, 2019 858

சென்னை (11 மார்ச் 2019): சமீப காலமாக 18+ என்ற வகையில் அடல்ட் காமெடி என்ற பெயரில் தமிழ் சினிமாக்கள் வரத் தொடங்கிவிட்டன.

பல கோடி முதலீட்டில் கருத்து மிக்க திரைப்படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு மிகக் குறைந்த முதலீட்டில் உருவாக்கும் இதுபோன்ற அடல்ட் படங்களுக்கு கிடைப்பது வேதனை.

அந்த வகையில் இந்த பட்டியலில் அமலாபாலும் இணைந்துள்ளார். மேயாத மான் பட இயக்குநர் இயக்கும் 'ஆடை' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தை அடுத்து அமலாபால் அட்வெஞ்சர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் 'அதோ அந்த பறவை போல' படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையில் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் அவருடைய புகைப்படங்களை தொடர்ச்சியாக சமூக வலைதளங்கில் பதிவேற்றம் செய்துவருகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...