பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் பகீர் பின்னணி - ஆண் நண்பர் கோபி திடீர் கைது!

மார்ச் 13, 2019 613

சென்னை (13 மார்ச் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தாவின் ஆண் நண்பர் கோபி கிருஷ்ணன் கைது செய்யப் பட்டுள்ளார்.

`பிக் பாஸ்’ சீஸன் 2-ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா, `பிக் பாஸ்’ வீட்டுக்குள் வலம் வந்தபோது, அவரது கையில் குத்தியிருந்த பச்சை மூலமே ‘கோபி’ என்ற பெயர் முதல் முதலாக வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. ‘யார் இந்தக் கோபி?’ என சக போட்டியாளர்கள் கேட்டபோது, தன் பாய் ஃப்ரெண்ட் என்றார் ஐஸ்வர்யா. நிகழ்ச்சியின் கடைசி சில எபிசோடுகளில், போட்டியாளர்களுக்கு அவர்கள் விரும்பியவர்களுடன் அலைபேசியில் பேச வாய்ப்பபு அளிக்கப்பட்டது. அப்போது, கமல்ஹாசன் முன்னிலையிலேயே ஐஸ்வர்யா இந்தக் கோபியுடன் பேசினார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவிடம் பேசிய அந்த கோபி, கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிய புகாரில் கைதாகி சிறை சென்று பின்பு விடுதலை ஆகியுள்ளார்.

இதற்கிடையே ஐஸ்வர்யாவுடன் கலை நிகழ்ச்சி ஒன்றிற்கு வெளிநாடு சென்று திரும்பிய கோபி கிருஷ்ணனை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது விவகாரம் குறித்து பதிலளிக்க ஐஸ்வர்யா மறுத்துவிட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...