போலீஸை தாக்கிய பிக்பாஸ் பிரபலம்!

மார்ச் 14, 2019 435

சென்னை (14 மார்ச் 2019): பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி மற்றும் அவரது நண்பர்கள் போலீசை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீரத்தமிழச்சியாக அடையாளம் காணப்பட்ட ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பெரும் அவப்பெயரை சம்பாதித்தா. இவரா வீரத் தமிழச்சி ? என்று எல்லோரும் அலுத்துக் கொண்டனர்.. தற்போது சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினியாகவும், சில தமிழ் படங்களில் நாயகியாகவும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜூலி தனது நண்பருடன் காரில் சென்ற போது, அந்தக் கார் சென்னை வேப்பேரி காவல் நிலைய தனிப்படை காவலர் பூபதியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து கேட்ட போது, சாதாரண உடையில் இருந்த காவலரை ஜூலி மற்றும் அவரது நண்பர் தாக்கியதாகவும், பூபதி போலீஸ் எனத் தெரிந்ததும் ஜூலியின் நண்பர் மேலும் 10 பேரை அழைத்து வந்து அவரைத் தாக்கிவிட்டு தப்பியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவலர் பூபதி அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது. ஏற்கனவே ஜூலி சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம் என்பதால் இந்தச் செய்தி காட்டூத்தீ போல் பரவியது. ஜூலியை நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு திட்டத் தொடங்கினர்.

இதற்கிடையே அந்த காரில் நான் பயணிக்கவில்லை என்றும் என் நண்பர்கள் செய்யும் தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று ஜூலி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...