இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்!

மார்ச் 15, 2019 9763

ஹரிஷ் கல்யாண், காளி பட புகழ் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ள படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

கவுதம் (ஹரிஷ் கல்யாண்) சின்ன வயதிலேயே தன் அம்மா வேறொருவருடன் ஓடிப்போவதால்

பெரிய ஏமாற்றமடைந்து கோபத்துடனேயே வாழ்கிறார். எந்த விஷயத்தையும் பொறுமையாக ஹண்டில் செய்ய தெரியாதவர். அடுத்த உடனேயே அடி தான்.

தாரா (ஷில்பா மஞ்சுநாத்) பெரிய இடத்து பெண். இவர்கள் இருவருக்கும் நடுவில் தமிழ்சினிமா வழக்கம்போல மோதலில் ஆரம்பித்து பின்னர் காதலில் முடிகிறது.

கவுதம்-தாரா இடையிலான காதல், மோதல், பிரிவு, குடும்பத்தின் எதிர்ப்பு தான் இந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம்.

உருகி உருகி காதலிக்கும் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனைகள் வர துவங்குகிறது. தன் அம்மாவை போல இவளும் நம்மை விட்டு விட்டு போய்விடுவாளோ என்கிற குழப்பம் ஹரிஷ் கல்யாணுக்கு, இவனை நம்பி போகலாமா என்ற குழப்பம் ஹீரோயினுக்கு. இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் ஆகும் தருவாயிலும் முடிவெடுக்க தயங்குகிறார். ஹரிஷ் கல்யாண் கோபத்தில் செய்யும் சில விஷயங்கள் தான் அதற்கு காரணம். இவர்கள் இறுதியில் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் மீதி கதை.

ஹரிஷ் கல்யாண் இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் வித்யாசமான ரோல். எப்போதும் கோபத்துடனேயே இருக்கும் இளைஞர் ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் மெச்சூரிட்டி இருந்தாலும் படத்தில் அவரது குரல் சில சமயங்களில் படத்திற்கு செட் ஆகாத பீல் தான் கிடைக்கிறது. ஹீரோயின் ரோலும் ரொம்ப மெச்சூராகத்தான் வடிவமைத்துள்ளார் இயக்குனர். பார்த்தவுடன் காதலிக்காமல் பொறுமையாக நான்கைந்து முறை யோசித்து முடிவெடுப்பதில் இருந்து அவன் தன்னை துன்புறுத்தும்போது 'திஸ் ஐஸ் த எண்டு' என அரை மனதோடு சொல்வது வரைஅனைத்திலும் ஈர்க்கிறார்.

ஹரிஷ் கல்யாணின் நண்பர்களாக நடித்துள்ள பாலசரவணன், மகபா ஆனந்த் காமெடியில் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் ரோலை கச்சிதமாக செய்துள்ளனர்.

வழக்கமான பார்த்து அலுத்துப் போன காதல் கதை - ஒரு முறை பார்க்கலாம்!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...