திருமணம் குறித்து திரிஷா ஓபன் டாக்!

மார்ச் 17, 2019 487

சென்னை (17 மார்ச் 2019): நான் எதிர் பார்க்கும் நபர் இன்னும் கிடைக்கவில்லை என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

திரிஷா சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த திரிஷா, பல புதுமுகங்களின் வரவால் அவருடைய மார்க்கெட் டல்லடித்தது. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தவருக்கு அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை.

பிறகு தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையில் காதல் என கிசுகிசுக்கப் பட்டது. அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று திரிஷா தனது திருமணம் குறித்து பேசுகையில், இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...