நடிகர் விஷாலுக்கு தமிழ் ராக்கர்ஸ் வாழ்த்து - அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

மார்ச் 18, 2019 425

ஐதராபாத் (18 மார்ச் 2019): நடிகர் விஷால் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் அவருக்கு தமிழ் ராக்கர்ஸ் பெயரில் இயங்கும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவிக்கப் பட்டுள்ளது.

நடிகர் விஷால் தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டியைத் திருமணம் செய்யவிருப்பதாக சில மாதங்கள் முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் தனது திருமண தேதியை விரைவில் அறிவிக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதில் நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தற்போது விஷால் - அனிஷாவின் நிச்சயதார்த்த மேடை அலங்காரம் நெட்டிசன்களின் தமிழ் ராக்கர்ஸ் லோகோ போல் இருப்பதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில், தமிழ் ராக்கர்ஸ் பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கில் நடிகர் விஷால் - அனிஷாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் ராக்கர்ஸை பின்னணியில் இயக்குவது விஷால்தான் என்ற குற்றச் சாட்டும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...