பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றும் - நயன் தாரா குறித்து ராதாரவி ஆபாச விமர்சனம்!

மார்ச் 24, 2019 1006

சென்னை (23 மார்ச் 2019): நடிகை நயன் தாராவை ஆபாசமாக வர்ணித்ததற்காக நடிகர் ராதாரவிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா நடிக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர், நடிகை நயன்தாரா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மேலும், இயக்குனர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகம் பிரபலங்களே கலந்துகொண்டார்கள்.

அப்போது பேசிய ராதாரவி, எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, அவர் இவ்வளவு நாட்கள் திரையுலகில் நிலைப்பதே மிகவும் பெரிய விஷயம். ஏனென்றால் அவரைப் பற்றி வராத செய்திகளே கிடையாது. அதெல்லாம் தாண்டி அவர் நிற்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நான்கு நாட்கள் மட்டுமே நியாபகம் வைத்திருப்பார்கள். பின்னர் விட்டுவிடுவார்கள். நயன்தாராவே ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார், இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போதெல்லாம் யாரு வேண்டுமானாலும் சீதாவாக நடித்துவிட முடிகிறது. முன்பு சீதாவாக நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர். விஜயாவைதான் தேடுவார்கள். அவரை பார்த்தால் கும்பிடத் தோன்றும். இப்போதெல்லாம் பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்’ என்று ராதாரவி பேசியுள்ளார். இதனால் ராதாரவியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே இவர் பெண் நடிகைகளை குறித்து சர்ச்சை ரீதியாக பேசியுள்ளார்.

இந்த சர்ச்சைக்கு பின்னர் பலர் ராதாரவிக்கு தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே இதுகுறித்து நயன் தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், “ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்டின் வாயிலிருந்து வந்துள்ள இந்த அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டனக் குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ என்று எனக்கு எந்த ஆதரவுமில்லை. தன் மீது அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக ராதாரவி இதைச் செய்துகொண்டிருக்கிறார். மூளையற்றவர்." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...