பிரபல இயக்குநர் மகேந்திரன் மரணம்!

ஏப்ரல் 02, 2019 458

சென்னை (02 ஏப் 2019): பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

79 வயதான மகேந்திரன், சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

மகேந்திரன் 80 களில் புகழ் பெற்ற இயக்குநர் ஆவார். பின்பு பின்பு படங்கள் இயக்காமல் இருந்த நிலையில், விஜய் நடித்த தெறி, ரஜினியின் பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...