பிக்பாஸ் பிரபலமும் ரகசிய காதலனும் - வைரலாகும் புகைப்படம்!

ஏப்ரல் 13, 2019 371

சென்னை (13 ஏப் 2019): கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு அடுத்த இடத்தில் படு டேமேஜ் செய்யப்பட்டவர் வைஷ்ணவி.

இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டு மக்களால் விமர்சிக்கப்பட்டார்.

வைஷ்ணவி விமானியாக இருக்கும் அஞ்சன் என்பவரை காதலித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் வேலை செய்யும் அஞ்சனும், வைஷ்ணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்களாம். இந்நிலையில் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...