ஜே.கே.ரித்திஷ் குறித்த ரகசியத்தை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி!

ஏப்ரல் 14, 2019 486

சென்னை (14 ஏப் 2019): மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் எப்படிப் பட்டவர் என்பது குறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கருத்து தெரித்துள்ளார்.

நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ்(46) திமுக சார்பில் 2009ல் ராமநாதபுரம் எம்.பியாக இருந்துள்ளார். திமுகவில் இருந்த அவர் 2014ல் அதிமுகவில் இணைந்தார். பல படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார். திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முக்கிய பதவி பகித்து வந்தார். தேர்தல் நெருங்குவதால் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது இந்த திடீர் மறைவுக்கு திரைத்துரையினர் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது டிவிட்டரில் எல்.கே.ஜி படத்தில் நடிக்க ரித்திஷ் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை. நல்ல மனிதர் அவர். இரக்கமற்ற கடவுளுக்கு ஏன் இப்படி செய்தார் என கூறியுள்ளார்.

ஜே.கே.ரித்தீஷ் மறைமுகமாக பல்வேறு உதவிகளை பலருக்கும் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...