நடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்!

ஏப்ரல் 19, 2019 1470

சென்னை (19 ஏப் 2019): நடிகை லக்‌ஷ்மி மேனன் பற்றி வெளியான வீடியோ குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சினிமாவிலிருந்து சற்று விலகி இருக்கும் லக்‌ஷ்மி மேனன் மீண்டும் அவரது நடிப்பில் பல படங்கள் வரவுள்ளதாக தெரிவித்த அவர் `யங் மங் சங்’ படம் முடிஞ்சு ரொம்பநாள் ஆகிவிட்டது. அதனால், சீக்கிரமே ரிலீசாகும் என்று நினைக்கிறேன். அடுத்து, 2 தமிழ்ப் படத்துல நடிக்க கதை கேட்டு வைத்துள்ளேன். முடிவானதும் சொல்கிறேன்.

நான் எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியாகதான் இருப்பேன். எனக்குக் கிடைத்துள்ள இந்த இடைவெளியை சந்தோ‌ஷமாக கழிக்கிறேன். வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனநிலை எனக்கு இருக்கு. ஏற்ற இறக்கங்கள் கொண்டதுதானே வாழ்க்கை... அது எனக்குப் புரியும்." என்றார்.

மேலு, " ஒருமுறை என்னைப் பற்றிய ஒரு பொய்யான வீடியோ பரவியது. அது பொய் என்று எல்லோருக்கும் தெரிந்து, எனக்கு ஆதரவாக எல்லோரும் பேசினாலும், அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வர எனக்கு சில வாரங்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்துல என்னால நார்மலா இருக்க முடியல. மனதளவில் ரொம்ப அவதிப்பட்டேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துட்டேன். இப்போது, நான் என் வேலைகளில் கவனமா இருக்கேன். அவரை மாதிரி இருக்கணும், இவரை மாதிரி இருக்கணும்னு நினைக்கும்போது தான் பிரச்சினை வரும். இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதனால், பிரேக், பிரச்சினைகள்... எதையும் நான் பெருசா எடுத்துக்கமாட்டேன். எப்போவும் சந்தோ‌ஷமா இருக்கணும், நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களையும் சந்தோ‌ஷமா வெச்சுக்கணும்... அவ்ளோதான்." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...