அவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்!

ஏப்ரல் 21, 2019 899

சென்னை (21 ஏப் 2019): கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் யாஷிகா ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள காட்டுப் பகுதியில் உடல் சிதைந்த நிலையில் கடந்த 16-ம் தேதி மரத்தில் தொங்கியபடி ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அது கடந்த 13-ம் தேதி மாயமான நவோதயா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மது என்ற மாணவியின் உடல் என்பது தெரியவந்தது.

மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. தேர்தல் நடைபெறும் சமயம் என்பதால் இந்த கொடூர சம்பவம் கவனம் பெறாமலேயே சென்றது.

மாணவி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இணையதளத்தில் பலர் விவாதிக்க அம்மாநிலம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவியுள்ளது. மேலும் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து டிவிட்டரில் #JusticeForMadhu என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. இது மட்டுமல்லாமல் 50 ஆயிரம் பேர் மதுவிற்கு நீதிகேட்டு கையெழுத்து இயக்கத்தையும் துவங்கினர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த், “இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியவர்களின் ஆணுறுப்பை துண்டித்துவிடுங்கள்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...