இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா!

ஏப்ரல் 21, 2019 492

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து அதிர்ஷடவசமாக தப்பியதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இன்று ஏழு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 150 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்புவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு சென்றிருந்த ராதிகா சரத்குமார் குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், சின்னமான் கிராண்ட் ஹோட்டலிலிருந்து நான் புறப்பட்ட சிறிது நேரத்தில் குண்டு வெடித்துள்ளது. இந்த அதிர்ச்சியை என்னால் நம்பமுடியவில்லை” என்று கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...