காஞ்சனா பட நடிகைக்கு பாலியல் தொல்லை - போலீசில் புகார்!

ஏப்ரல் 25, 2019 513

சென்னை (25 ஏப் 2019): ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா 3' படத்தில் நடித்த நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.

காஞ்சனா 3 படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி இவர்களுடன் இந்தப் படத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜானே கட்டாரியா என்பவர்நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் இருக்கும் இவர் டான்ஸர், புகைப்படக் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவர். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி நடிப்பு கற்றுக் கொடுத்தும் வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளம் மூலம் நண்பராக அறிமுகமான ரூபேஷ் குமார் என்பவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார். மேலும் விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார்.
தொடர்ந்து ஜானே கட்டாரியாவுக்கு பாலியல் அழைப்பு விடுத்துள்ளார் ரூபேஷ் குமார். அதற்கு ஜானே கட்டாரியா இணங்க மறுக்கவே அவரது புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து இணையத்தில் வெளியிடப் போவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜானே கட்டாரியா இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் ரூபேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...