குறளரசன் திருமணம் - புதிய தோற்றத்தில் சிம்பு!

ஏப்ரல் 27, 2019 1080

சென்னை (27 ஏப் 2019): இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம், நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது.

குறளரசன் நபீலா அஹமத் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் குறள் பிப்ரவரி 16-ம் தேதி அவரின் தந்தை முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

இதனை அடுத்து குறளரசன் - நபீலா அஹமத் ஆகியோரது திருமணம் பெரியோர்களால் நிச்சயித்தப்படி நேற்று சென்னை, அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது

மிகவும் எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமக்கள் வீட்டார் மட்டுமே இருந்தனர். இந்த திருமணத்தில் சிம்புவின் தோற்றமே பலரது கவனத்தை ஈர்த்தது. சிம்பு தாடி இல்லாமல் மிகவும் ஸ்லிம்மாக உள்ளார்.

குறளரசன் - நபீலாவின் வரவேற்பு வரும் 29-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்கான அழைப்பிதழைதான் சினிமா, அரசியல் பிரமுகர்களிடம் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...