நடிகை ஸ்ருதிக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி!

ஏப்ரல் 27, 2019 648

மும்பை (27 ஏப் 2019): லண்டன் லவ்வருடனான நடிகை ஸ்ருதி ஹாசனின் காதல் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் பிரிவதாக ஸ்ருதியின் காதலர் மைக்கேல் கார்சேல் அறிவித்துள்ளார்.

7-ஆம் அறிவு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ருதி ஹாசன் தமிழின் முன்னணி நடிகையாக இருக்கிறார். கமல்ஹாசனின் மகளான இவர், லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார்.

இதனை வெளிப்படுத்தி வந்த இருவரும், அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து, இளசுகள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வந்தனர். காதலன் மைக்கேலை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, தந்தை கமலுக்கு ஸ்ருதி அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில். இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் பிரிவதாக ஸ்ருதியின் காதலர் மைக்கேல் கார்சேல் அறிவித்துள்ளார்.

எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது என ஸ்ருதியின் ரசிகர்கள் எண்ணியிருந்த நிலையில், லவ் ப்ரேக் அப் ஆகி விட்டதாக காதலன் மைக்கேல் கார்சேல் அறிவித்துள்ளார்.

மும்பை மிரர் என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த கார்சேல் இந்த தகவலை வெளியிட்டார். பரஸ்பர புரிந்துணர்வுடன் இருவரும் பிரிவதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...