முஸ்லிம் குடும்ப பின்னணி என்பதால் கெடுபிடி அதிகம் - புதுமுக நடிகை!

ஏப்ரல் 28, 2019 1799

சென்னை (28 ஏப் 2019): அகம்பாவம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் புதுமுக நடிகை சமீராசாய் பட அனுபவம் பற்றி தெரிவித்துள்ளார்.

நமீதா திருமணத்திற்குப் பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்படம் அகம்பாவம். இந்த படத்தை வராகி தயாரித்து நடிக்கிறார். இதில் இன்னொரு கதாநாயகியாக நடிப்பவர் சமீராசாய்.

இவர் இந்த படம் குறித்து தெரிவிக்கையில், "என் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததால் கட்டுப்பாடுகள் அதிகம். எனினும் சினிமாவில் நடிக்க என் அம்மா துணை நின்றார். எனக்கு பல படங்கள் வாய்ப்புகள் வந்தன. எனினும் நல்ல கதைக்காக காத்திருந்தேன். அகம்பாவம் கதை எனக்கு பிடித்திருந்தது. இதனால் அகம்பாவம் ரிலீசுக்குப் பிறகு வேறு படங்களில் நடிப்பேன்" என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...