என் தலை விதி - கண்ணீர் விட்ட டி.ராஜேந்தர் - வீடியோ!

ஏப்ரல் 30, 2019 1061

சென்னை (30 ஏப் 2019): குறளரசன் திருமணம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியுடன் பேசினார்.

டிராஜேந்தரின் இளய மகன் குறளரசன் நபீலா என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்தார். இதனை அடுத்து குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார். இந்நிலையில் குறளரசன் நபீலா திருமணம் சமீபத்தில் மணமகள் இல்லத்தில் எளிமையாக நடைபெற்றது. இதன் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர் நடிகையர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் இன்று இத்திருமணம் குறித்து விளக்கம் அளிக்க டி ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிம்புவின் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டி.ராஜேந்தர். "என் விதியைதான் நான் நொந்து கொள்ள வேண்டும் இதுபோன்ற கேள்விகள் கேட்டு என்னை சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்" என்று கண்ணீருடன் பதிலளித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...