நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் - பிரபல நடிகரை விவாகரத்து செய்த மனைவி!

மே 05, 2019 822

சென்னை (05 மே 2019); நடிகைகளுடன் நெருக்கமாக நடித்தது பிடிக்காமல் என்னை விவாகரத்து செய்தார் என் மனைவி என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் அவருக்கு கடந்த ஆண்டு வெளியான ராட்சசன் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

தற்போது இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணு விசாலுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் விஷ்ணு விஷால். அந்த பதிவில், “கடந்த ஒருவருடமாக நானும் ரஜினியும் பிரிந்து வாழ்கிறோம். தற்போது சட்டப்பூர்வமாக விவாகரத்தாகியுள்ளது.

இந்நிலையில் தனது விவாகரத்து குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதன்முறையாக பேட்டியளித்துள்ளார் விஷ்ணு விஷால். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, நான் என்னுடைய வாழ்க்கையில் உணர்ந்த விஷயம் என்னவென்றால் எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போதும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். நான் மிகவும் உறுதியாக இருந்த விஷயம் எனது திருமணம். ஆனால் அதுவும் இப்போது இல்லை.

விவாகரத்தினால் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்கள் பல காலம் என்னுள் இருக்கும். துவக்கத்தில் நான் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தேன். ஆனால் அப்படி இருந்தால் சினிமாவில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்து அனைவரிடமும் சகஜமாகப் பழகினேன். படத்தில் காதல்காட்சிகள் சிறப்பாக இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சக நடிகைகளுடன் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் இந்தப் பிரச்னை ஆரம்பமானது.

நீ முன்பு இருந்தது போல் இல்லை மாறிவிட்டாய் என்ற பேச்சில் ஆரம்பித்து, நான் காதலித்த நபர் நீ இல்லை எனும் அளவுக்குச் சென்றது. இப்போதும் எனது மனைவியையும், மகனையும் உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன். அவரும் என்னைப் புரிந்து கொள்வார். அவர் மிகவும் நல்லவர். எனது மனைவிக்கு நான் எப்படிப்பட்டவன் என்பது நன்றாகத் தெரியும்.

சில சமயங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்த பிரபஞ்சத்துக்கே பிடிக்காமல் போய் விடுகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...