பிரபல நடிகையை கடத்தி வன்புணர முயற்சி - சினிமா ஊழியர் கைது!

மே 07, 2019 663

பெங்களூரு (07 மே 2019): பிரபல கன்னட நடிகையை கடத்தி வன்புணர்வு செய்ய முயற்சி மேற்கொண்ட சினிமா  ஊழியரை (வெல்டர் ) போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னட படங்களிலும் பல குறும்படங்களிலும் நடித்த 23 வயது நடிகையை போட்டோ ஷூட் எடுப்பதாக கூறி தனியாக ஒருவர் அழைத்துள்ளார். அதற்கு சம்மதித்த நடிகை ஆள் நடமாட்டம் இல்லாத ரெயில்வே ட்ராக் வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த நபர் நடிகையை பார்த்து திடீரென கத்தியைக் காட்டி வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். மேலும் ரூ 5 லட்சம் தந்தால் விட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து தனது நண்பியிடம் தகவல் கொடுத்த நடிகை ரூ 5 லட்சம் தயார் செய்ய கூறியுள்ளார்.

இதற்கிடையே நடிகை கடத்தப் பட்ட தகவல் போலீசாருக்கு தெரியப் படுத்தப் பட்டது. நடிகை பணம் தயார் செய்ததாக கூறி போலீசார் உதவியுடன் நடிகையின் நண்பி சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போது மறைமுகமாக இருந்த ரெயில்வே போலீசார் அந்த நபரை பாய்ந்து பிடித்து கைது செய்தனர்.

இச்சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...