இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா நடிகை பிரியா ஆனந்த்!

மே 13, 2019 435

சென்னை (13 மே 2019): ரம்ஜான் நோன்பு இருந்து வரும் நடிகை பிரியா ஆனந்த் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் ஒன்று தீயாய் பரவுகிறது.

‘எதிர்நீச்சல், ‘வணக்கம் சென்னை’, ‘வை ராஜா வை’ எல்கேஜி படங்களில் நடித்த பிரியா ஆனந்த் இவ்வருடம் ரம்ஜான் நோன்பு இருக்கிறார். இந்து மதத்தை சேர்ந்த பிரியா ஆனந்த் ரமலான் நோன்பு இருப்பது பரபரப்பானது.

இதுகுறித்து பிரியா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

‘அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்து கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு எம்மதமும் சம்மதம்தான். நம்மை மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.

இந்த வருடம் ரம்ஜான் நோன்பு ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை அதற்கான சாராம்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறேன். நோன்பையும் என்னால் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிசெய்து கடைப்பிடித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...