பிக்பாஸ் 3 தமிழில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் அதிகாரப் பூர்வ அறிவிப்பு!

மே 15, 2019 1605

சென்னை (15 மே 2019): இந்த ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் நிகழ்ச்சிக்கான புரமோஷன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன் ஸ்டைலாக தோன்றியுள்ளார். மேலும் சின்னத்திரை நடிகை ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியலை விஜய் டிவி நிர்வாகம் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.

மேலும், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...